கருணாநிதி தொண்டர்களை சந்திப்பாரா? மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை சிந்தாரிப்பேட்டையில் மே தின பூங்காவில் மே தின விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
கருணாநிதி தொண்டர்களை சந்திப்பாரா? மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: சென்னை சிந்தாரிப்பேட்டையில் மே தின பூங்காவில் மே தின விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சிந்தாரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

தொழிலாளர் உரிமைக்காக பாடுபட்டவர் திமுக தலைவர் கருணாநிதி. மே 1-ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்தது திமுக ஆட்சியில் தான். இந்திய அளவில் மே 1-ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க கருணாநிதி முயற்சி எடுத்தவர் என்றும் மே தினத்தை கொண்டாடும் தகுதி திமுகவுக்கு உண்டு.

மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட விவசாயிகளுக்கான முழுஅடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றது என்று கூறினார்.

கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் அனுமதி கொடுத்தால் அவர் தனது பிறந்தநாள் அன்று தொண்டர்களை சந்திப்பார் என்றார்.

தமிழ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தியது, ஆனால், அதன் விவரங்கள் வெளியிடவில்லை. சோதனையின் பின்புலம் தான் என்ன?  சோதனையில் கண்டுபிடித்தது என்ன?

சோதனைகள் கண் துடைப்பாக இருக்க கூடாது. செயல்பாட்டில் இறங்க வேண்டும். முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டியில் சோதனை, மன்னார்குடி மாபியா கும்பல் வீட்டில் சோதனை நடந்தது நடவடிக்கை எடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மத்தியல் ஆளும் பாஜக மாநில சுயாட்சியை மீறி செயல்படுகிறது. சுயாட்சி கொள்கையில் பாஜக தலையிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com