மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவரை நான் ஒருமுறைகூட சந்தித்தது கிடையாது என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தூத்துக்குடியில் புதன்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் வறட்சியால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, பதவியில் இருந்துகொண்டு தெரிவிக்காத கருத்துகளை நான் இப்போது தெரிவிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவை நான் மருத்துவமனையில் ஒருமுறைகூட சந்தித்தது கிடையாது. மருத்துவர்களின் அறிக்கைகளை வைத்து அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்துகளை அப்படியே நாங்கள் நம்பிவிட்டோம் என்றார் அவர். அதிமுகவில் உள்ள இரு அணிகளும் இணைவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் தற்போதைய நிலை என்ன, பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


