எதிர்காலத்தில் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்க அரசு அறிவித்துள்ள விதிமுறைகள்
அங்கீகாரம் இல்லா வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று எதிர் காலத்தில் வீட்டு மனைகளை உருவாக்கும் போது அனுமதி அளிப்பதற்கான விதிமுறைகள்


அங்கீகாரம் இல்லா வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று எதிர் காலத்தில் வீட்டு மனைகளை உருவாக்கும் போது அனுமதி அளிப்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்: இனி வரும் காலங்களில் புதிய வீட்டு மனைகளை அமைக்கும்போது, நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநரின் ஒப்புதலை மட்டுமே பெற வேண்டும்.
அதற்கு முன்பாக, அந்த நிலம் விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலம் என்று குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயத்துறை இணை இயக்குநரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி வழங்கப்படும் நிலம் ஆறு, ஏரி, குளம், கால்வாய் போன்ற நீர்நிலைகளில் இல்லை என்பதையும் அரசு புறம்போக்கு நிலம், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான நிலம் இல்லை என்பதையும் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டும்.
விவசாயத்துக்குத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடிய தகுதியான நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற ஆட்சியரும், விவசாயத்துறை இணை இயக்குநரும் ஒப்புதல் அளிக்க கூடாது.
இதற்காக நகர் மற்றும் ஊரமைப்பு துணை இயக்குநருடன், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
வீட்டு மனைகளை அமைக்க இயக்குநர் ஒப்புதல் அளித்த பின்னர், உள்ளாட்சி அமைப்புகள் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் 3 சதவீதத்தை கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...