மைத்ரேயன் பேசுவது வேடிக்கையானது: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவுக்காக எந்த தியாகத்தையும் செய்திராத மைத்ரேயன், ஆட்சியில் யாரெல்லாம் இருப்பார்கள் எனப் பேசுவது வேடிக்கையானது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
தமிழறிஞர் கால்டுவெல் 203-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.பெஞ்சமின்,
தமிழறிஞர் கால்டுவெல் 203-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.பெஞ்சமின்,
Published on
Updated on
1 min read

அதிமுகவுக்காக எந்த தியாகத்தையும் செய்திராத மைத்ரேயன், ஆட்சியில் யாரெல்லாம் இருப்பார்கள் எனப் பேசுவது வேடிக்கையானது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் 203-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், சேவூர் ராமச்சந்திரன், மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கோ.விசயராகவன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: 'அதிமுக ஆட்சி 2021க்கு பிறகும் தொடரும். அதில் ஜெயக்குமார் கம்பெனி இருக்காது என பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன் கூறியிருக்கிறார்.
அடுத்த தேர்தலிலும் அதிமுகவே ஆட்சிக்கு வரும் என்பது உண்மைதான். இதை கட்சிக்காக கஷ்டப்பட்டவர்கள் கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம். கட்சிக்கு சம்பந்தமில்லாத மைத்ரேயன் கூறுவதை ஏற்க முடியாது. சந்தர்ப்பவாதிகள் காலத்தால் அடையாளம் காட்டப்படுவார்கள். தமிழக அரசின் செயல்பாடு அனைவராலும் பாராட்டப்படுகிறது. தமிழக அரசின் பணிகளில் எந்தவித சுணக்கமும் இல்லை. 140 வருடங்களில் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவுகிறது. தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாரையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை. பன்னீர்செல்வம் அணியினரை ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com