நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

திருவண்ணாமலை அருகே ராணுவ வீரரின் மனைவியை கொன்று 70 சவரன் நகை கொள்ளை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:30 pm

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ராணுவ வீரரின் மனைவியை கொன்று 70 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுகாநல்லூரைச் சேர்ந்தவர் சங்கம். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காந்தரூபியை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்து 70 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை மற்றும் கொள்ளையில் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் உறவினர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். மர்ம நபர்களை பிடிக்க தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.