14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!
சென்னை புரசைவாக்கத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரைக் போலீஸார் கைது செய்துள்ளனர்.


சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரைக் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த வடுவதாசு. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவரது இரண்டாவது மகளுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமி பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கருவுற்றிருந்ததாகவும் தற்போது கரு கலைந்துபோனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், சிறுமியிடம் விசாரித்தபோது அதேபகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தன்னை வலுக்கட்டாயமாக வீட்டிற்குத் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்தார்.
இது குறித்து வேப்பேரி மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாரி என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...