கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ரேங்க் முறை ரத்துடன் முதல்முறையாக வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவு முழு விபரம்..!

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:30 pm

DIN

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டார். இதில் 92.1 சதவீத மாணவ, மாணவிகள் மொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 1813 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வு முடிவுகளை www.tnresults.in, www.tnresults.nic.in, www.tnresults.gov.in ஆகிய இணைய தளங்களில் பார்க்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், மாணவர்களின் செல்போன் எண்களுக்கு தேர்வுத்துறையே தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும், தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதினர்.

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, மாநில-மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் (1, 2, 3) மாணவர்கள் பற்றிய ரேங்க் விவரங்கள் வெளியிடப்படாது எனவும், இந்த புதிய நடைமுறை இன்று வெள்ளிக்கிழமையன்று (மே 12) வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளிலேயே பின்பற்றப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

மத்திய இடைநிலை வாரிய நடைமுறையின் அடிப்படையிலும், பெற்றோர் மற்றும் பொது மக்களிடமிருந்து அவ்வப்போது அரசுக்கு கொண்டு வரப்பட்ட புகார்களின் படியும், மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழல்களைத் தவிர்க்கவும் இந்தக் கல்வியாண்டு (2016-17) முதல் 10,  பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் முறையைக் கைவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்:
* அரசு பள்ளிகள் – 86.87 சதவீதம்
* தனியார் பள்ளிகள் – 97.77 சதவீதம்
* மாநகராட்சி பள்ளிகள் – 90.06 சதவீதம்
* நகராட்சி பள்ளிகள் – 87.20 சதவீதம்
* ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் – 96.06 சதவீதம்
* பழங்குடியினர் பள்ளிகள் – 86.65 சதவீதம்
* சுயநிதி பள்ளிகள் – 97.77 சதவீதம்

கிரேடு விவரம்:
* 1200க்கு 1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் ’ஏ’ கிரேடு. அதனை 1,171 பேர் 'ஏ' கிரேடு பெற்றுள்ளனர்.
* 1200க்கு 1151 முதல் 1180 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ‘பி’ கிரேடு. 12,283 பேர் 'பி' கிரேடு பெற்றுள்ளனர்.
* 1200க்கு 1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ‘சி’ கிரேடு. 14,806 பேர் 'சி' ரேடு பெற்றுள்ளனர்.
* 1200க்கு 1101 முதல் 1125 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ‘டி’ கிரேடு. 14,806 பேர் 'டி' கிரேடு பெற்றுள்ளனர்.
* 1200க்கு 1001 முதல் 1100 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ‘இ’ கிரேடு. 95,906 பேர் 'இ' கிரேடு பெற்றுள்ளனர்.

100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை விட 0.7 சதவீதம் அதிகமாகும். இதில், மாணவர்கள் 89.3 சதவீதமும், மாணவிகள் 94.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு இடையிலான தேர்ச்சி இடைவெளி இந்த ஆண்டு 5.2 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4 ​ சதவீதமாக இருந்தது. மேலும், 1813 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தனியார் மற்றும் அரசு பள்ளிகள் சேர்த்து மொத்தமாக 1813 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதில் 292 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு பள்ளி கூட 100 சதவீத தேர்ச்சியை பெறவில்லை.

200க்கு 200 (முழு மதிப்பெண்கள்) பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை:

* மொழிப்பாடங்களில் (தமிழ், ஆங்கிலம்) இந்த ஆண்டு முழுமையான மதிப்பெண்கள் யாரும் பெறவில்லை.

- இயற்பியல் - 187 பேர்

- வேதியியல் - 1123 பேர்

- உயிரியல் - 221 பேர்

- தாவரவியல்- 22 பேர்

- விலங்கியல் - 4 பேர்

- கணிதம் - 3656 பேர்

- புள்ளியல் - 68 பேர்

- கணினி அறிவியல் - 1666 பேர்

- வணிகவியல் - 8301 பேர்

- வணிகக் கணிதம் - 2551 பேர்

- வரலாறு -336 பேர்

- பொருளாதாரம் - 1517 பேர்

மாவட்ட வாரியாக பள்ளிகள் பெற்றுள்ள தேர்ச்சி விகிதம்:
1. கன்னியாகுமரி - 95.75
2. திருநெல்வேலி - 96.08
3. தூத்துக்குடி- 96.44
4. ராமநாதபுரம்- 96.77
5. சிவகங்கை-96.18
6. விருதுநகர்-97.85
7. தேனி 95.93
8. மதுரை- 93.61
9. திண்டுக்கல் -92.80
10. ஊட்டி-92.06
11. திருப்பூர்-96.05
12. கோவை-95.83
13. ஈரோடு-96.69
14. சேலம் -92.89
15. நாமக்கல்-96.40
16. கிருஷ்ணகிரி- 88.02
17. தருமபுரி-92.23
18. புதுக்கோட்டை-92.16
19. கரூர்-94.96
20. அரியலூர்- 88.48
21. பெரம்பலூர்-93.54
22. திருச்சி-95.50
23. நாகை- 88.08
24. திருவாரூர்- 88.77
25. தஞ்சாவூர்- 92.47
26. விழுப்புரம்-86.36
27. கடலூர்-84.86
28. திருவண்ணாமலை-91.84
29. வேலூர்-84.99
30. காஞ்சிபுரம்-88.85
31. திருவள்ளூர்- 87.57
32. சென்னை-92.99

அரசுப் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 87.86 சதவீதம். அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை 292 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால், அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் 97.77 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள மாவட்டங்களில் 97.85 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும்,  இராமநாதபுரம் (95.395 சதவீதம்) இரண்டாவது இடத்தையும், ஈரோடு (94.7514 சதவீதத்துடன்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 84.99, 84.86 சதவீத மதிப்பெண்களுடன் வேலூர், கடலூர் மாவட்டங்கள் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

பார்வை மாற்றுத்திறனாளிகள் 92 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 88 சதவீத பேரும், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்களில் 78 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

திருநங்கை மாணவி தேர்ச்சி:
சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி பானு, பிளஸ் 2 தேர்வில் 550 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் அறிவியல் பாடப்பிரிவை எடுத்து படித்துள்ளார். இந்தியாவில் பள்ளி மாணவியாக இருக்கும் ஒரே திருநங்கையும் இவர்தான்.

எதிர்காலத்தில் மருத்துவராவதே தனது லட்சியம் என பானு தெரிவித்துள்ளார்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்கள் வரும் 15-ஆம் தேதி இணையதளம் வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும், 17-ஆம் தேதி பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  மொழிப்பாடங்களுக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.