வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

குவிந்துகிடக்கும் கடனைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

தென் மாநிலங்களில் அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலம் தமிழகம் என்பது ரிசர்வ் வங்கியின் 2016-17 ஆய்வறிக்கை மூலம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:31 pm

DIN

சென்னை: தென் மாநிலங்களில் அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலம் தமிழகம் என்பது ரிசர்வ் வங்கியின் 2016-17 ஆய்வறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது. எனவே, குவிந்துகிடக்கும் கடனைக் குறைப்பதற்கான செயல்திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘மாநிலங்களின் நிதிநிலை: 2016-17 நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆய்வு’’ என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய 5 தென் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகளில், தமிழகத்தில் தான் வருவாய்ப் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றவகையில் வருவாயைப் பெருக்க முடியாமல் தமிழகம் தடுமாறி வருகிறது என்பதையே ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2016-17ஆம் ஆண்டில் மட்டுமின்றி, 2017-18 ஆம் ஆண்டிலும் தமிழகம் தான் வருவாய் பற்றாக்குறையில் முதலிடத்தில் உள்ளது. நடப்பாண்டில் இது ரூ.15,930 கோடியாகும். நடப்பு நிதியாண்டின் இறுதியில் இது ரூ.20,000 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் பற்றாக்குறையில் மட்டுமின்றி, நிதிப்பற்றாக்குறையிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.41,977 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்டின் இறுதியில், இது ரூ.50,000 கோடியை தாண்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதேநிலை நீடித்தால் தமிழகத்தை திவாலான மாநிலம் என்று அறிவிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.

எனவே, தமிழக ஆட்சியாளர்கள் வீண் வேலைகளில் ஈடுபடுவதை விடுத்து, தமிழகத்தின் வருவாயை அதிகரித்து மலைபோல் குவிந்து கிடக்கும் கடனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதற்கான செயல்திட்டங்கள்  என்னென்ன? என்பதை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.