தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த இரண்டு அடிமைகள்: துரைமுருகன் விமரிசனம்
தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த இரண்டு அடிமைகள், ஓபிஎஸ், இபிஎஸ் என்று திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் கூறியுள்ளார்.


சென்னை: தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த இரண்டு அடிமைகள், ஓபிஎஸ், இபிஎஸ் என்று திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இது குறித்து துரைமுருகன் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சியே நடைபெறவில்லை. ஆற்றில் தெர்மகோல் விட்ட அமைச்சர் செல்லூர் ராஜுவால் தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பின் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைந்து போகும். அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த இரண்டு அடிமைகள் யார் என்றால், ஓ. பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் என்றும் துரை முருகன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...