பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

பண்ருட்டி வட்டம் 1426-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி 25ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.


பண்ருட்டி: பண்ருட்டி வட்டம் 1426-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி 25ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜமாபந்திக்கு சார் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் விஜய் ஆனந்த், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராஜவேல், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வி. செந்தில்வேல் ஜமாபாந்தி மேலாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.

முதல் நாளான இன்று நெல்லிக்குப்பம் குறுவட்டத்தைச் சேர்ந்த பொங்கராயனுர், சித்தரசூர், சாத்திப்பட்டு, கீழ்ப்பாதி, மேல்பாதி உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், வீட்டு மனைப் பட்டா, உதவியோர் உதவைத் தொகை தொடர்பான மனுக்களை அளித்து வருகின்றனர்.

இந்த கோரிக்கை மனுக்கள் மீது வருவாய் தீர்வாய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com