நெய்வேலியில் மூன்று பெண்களிடம் செயின் பறிப்பு
நெய்வேலியில், செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்துச்சென்ற மூன்று பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


நெய்வேலியில், செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்துச்சென்ற மூன்று பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி வட்டம் 5-ஐ சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி காலைசெல்வி. வட்டம் 19-ஐ சேர்ந்தவர் சையத் முஸ்தபா, இவரது மனைவி தில்ஷாத் பேகம். வட்டம் -25 கேரளா சாலையில் வசிப்பவர் சரஸ்வதி. இவரது கணவர் சங்கர் என்.எல்.சி.யி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த பொழுது கலைசெல்வி, சரஸ்வதி, தில்ஷாத் பேகம் அவரவர் வசிப்பிடம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்பகள், வாகனத்தை ஓட்டிய படி மூன்று பெண்களிடமும் சுமார் 13 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...