

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிளாளிகளான பார்த்திபன் மகள் பாவனா (10), மூர்த்தி மகள் யுவஸ்ரீ (8) ஆகியோர் புதன்கிழமை பிற்பகலில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. பணியில் ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுளளனர். அரசுத் துறைகளில் கவனக்குறைவு என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.