தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 4:45 am

DIN

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிளாளிகளான பார்த்திபன் மகள் பாவனா (10), மூர்த்தி மகள் யுவஸ்ரீ (8) ஆகியோர் புதன்கிழமை பிற்பகலில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. பணியில் ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுளளனர். அரசுத் துறைகளில் கவனக்குறைவு என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.