முட்டை கொள்முதல் விலை: வரலாறு காணாத உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் கொள்முதல் விலை அதிகபட்சம் ரூ.4.35 ஆக இருந்தது. இப்போது ரூ.4.50 ஆக உயர்ந்துள்ளது.


நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் கொள்முதல் விலை அதிகபட்சம் ரூ.4.35 ஆக இருந்தது. இப்போது ரூ.4.50 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு முட்டையின் விலை 9 பைசா அதிகரித்து ரூ.4.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முட்டையின் தேவை அதிகரித்து வருகிறது. அதே சமயம், அதன் உற்பத்தி குறைந்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளத்தில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாமக்கல்லில், முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணயக் குழுக் கூட்டத்தில், முட்டை விலையில் 9 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பண்ணைப் பராமரிப்பு, கோழி வளர்ப்பு செலவு, தீவன மூலப்பொருள்கள் விலை ஆகியவை முட்டை கொள்முதல் விலையைத் தீர்மானிக்கின்றன.
இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 10 காசு வரை விலை உயர்கிறது. இதன் அடிப்படையில்தான் நிகழாண்டும் முட்டை விலை இப்போது ரூ.4.50 ஆக உயர்ந்துள்ளது.
முட்டை விலை ரூ.4.50 என நிர்ணயிக்கப்பட்ட போதும், கொள்முதலில் 30 காசு வரை மைனஸ் போவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அதே சமயத்தில், முட்டை கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வெளிச் சந்தையில் ரூ.4.75 வரை முட்டை விற்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...