தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

என் வீட்டில் கற்கண்டைக் கூட வைரமாக நினைத்தால் நான் பொறுப்பல்ல: திருவண்ணாமலையில் தினகரன் பேட்டி

என் வீட்டில் இருக்கும் கற்கண்டைக் கூட வைரமாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

News image
Updated On :11 நவம்பர் 2017, 11:08 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை: என் வீட்டில் இருக்கும் கற்கண்டைக் கூட வைரமாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன் திருவண்ணாமலை வந்தார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய சோதனையை 3 நாட்களாக நடத்தி வருகிறார்கள். வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

என் வீட்டில் பாதாள அறையும் இல்லை. எந்த நகையும் இல்லை. என் வீட்டில் இருக்கும் கற்கண்டைக் கூட அவர்கள் வைரமாக நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் வழக்கமாக சாப்பிடும் ஓட்டல்களைக் கூட வைக்கவில்லை. அங்கும் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார் தினகரன்.


உறவினர் வீட்டில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்துக் கேட்டதற்கு, என் உறவினர் வீட்டில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்றார்.

இந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, நான் காந்தியின் பேரனும் அல்ல; கோட்சேவின் வழித்தோன்றலும் அல்ல என்று பதிலளித்தார்.

கைது நடவடிககை இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.