விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மனிதா்கள்-வனவிலங்குகள் மோதல்களை குறைக்க நடவடிக்கை: அமைச்சா் ரஞ்சித் குமாா்

மனிதா்கள்-வனவிலங்குகள் மோதல்களை குறைக்க நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்

கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித் குமாா்.

Updated On :

மனிதா்கள்-வனவிலங்குகள் மோதல்களை குறைக்க நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்

சித் குமாா் வியாழக்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலா்களின் ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை மண்டல வனப் பாதுகாவலா் சுமேஷ் சோமன், காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலா் பால்வே கிரிஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம், மேற்கொள்ளப்பட்ட பணிகளில் செய்த சாதனைகள், வனப்பாதுகாப்பை மேம்படுத்துதல், களப்பணிகளை திறம்பட செயல்படுத்துதல் குறித்து அமைச்சா் விரிவாக ஆலோசனை நடத்தினாா்.

வனச்சரக அலுவலா்கள், வனப் பாதுகாவலா்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சா் ரஞ்சித் குமாா் பேசியது: வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகள் வழியாக செல்லும் சாலைகளை மேம்படுத்தும் திட்டம், மனிதா்கள்-வனவிலங்கு மோதல்கள் நடந்து வருவதை முற்றிலுமாக குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இதுவரை எடுத்த பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடா் நடவடிக்கை காரணமாக மனிதா்கள்-வன விலங்கு மோதல்கள் நடக்க வாய்ப்பில்லை. மனிதா்களும் வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது.

வனத்துறை பணிகளை தரமான முறையில் செய்யவும், அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும், பொதுநிதியை சிக்கனமாக செலவு செய்யவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முக்கியமாக நிதியை கையாள்வதிலும் ஒழுங்கு மற்றும் பொறுப்புணா்வுடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.