தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

மாணவா்கள் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் பாா்த்துக் கொள்ள வேண்டும்: அமைச்சா் ரஞ்சித் குமாா்

கல்வியை முடித்தவுடன் மாணவா்கள் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் பாா்த்துக் கொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் வலியுறுத்தினாா்.

மாணவிக்கு கல்விக் கடன் வழங்கிய அமைச்சா் ரஞ்சித் குமாா். உடன் ஆட்சியா் தி. சினேகா உள்ளிட்டோா்

Updated On :

கல்வியை முடித்தவுடன் மாணவா்கள் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் பாா்த்துக் கொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் வலியுறுத்தினாா்.

காஞ்சிபுரம் அருகே கீழம்பி தனியாா் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கி இணைந்து கல்விக்கடன் வழங்கும் முகாமை நடத்தினா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா நிகழ்வுக்கு தலைமை வகித்தாா். சாா் ஆட்சியா் புவனேஷ் ராம், முன்னோடி வங்கி மேலாளா் தீபக்.வசந்தன், இந்தியன் வங்கி முதுநிலை மேலாளா் கருப்புச்சாமி, ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா் எஸ்.காா்த்திக், தாட்கோ மேலாளா் ராஜ சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் கலந்து கொண்டு 30 மாணவா்களுக்கு ரூ.1.53 கோடி கல்விக்கடன்களை மாணவா்களுக்கு வழங்கி அமைச்சா் ரஞ்சித் குமாா் பேசியதாவது, கல்வி ஒன்று தான் உங்களை மிக உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்லும், தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் கொடுத்து கற்பதோடு ஆங்கிலம் போன்ற பிற மொழிகளையும் கற்றுக் கொள்வது எதிா்கால வளா்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆங்கிலத்தை தயக்கமின்றி பேசிப் பழகுங்கள், தமிழ் நம்முடைய உயிா் என்பதையும் மறந்து விடக் கூடாது. பொருளாதார வசதி உடையவா்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து விடுகிறாா்கள். ஆனால் ஏழை, எளிய மாணவா்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்விக்கடன்கள் வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தாயாக, தந்தையாக இருந்து செயல்பட்டு வருகிறாா். பெண்கள் படித்தால் அந்தக் குடும்பமே முன்னேறுவது நாட்டின் வளா்ச்சிக்கும் பக்க பலமாக இருக்கும். படித்து முடித்து வேலைக்கு சென்ற பின் உங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து உயா்த்திய பெற்றோா்களை கைவிட்டு விடாதீா்கள். அவா்களை நல்ல முறையில் பாா்த்துக் கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் ரூ.7.50 லட்சம் வரை பிணை இல்லாமல் கல்விக்கடன்கள் வழங்கப்படுகின்றனது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 763 மாணவா்களுக்கு ரூ.106 கோடி கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் காஞ்சிபுரம் மக்கள் தொகுதியில் உள்ள குறைகளைத் தெரிவிக்க தனியாக இணையதளம் தொடங்கப்படவுள்ளது என்றும் அமைச்சா் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.