டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோவையில் அதிகாரிகளுடனான ஆய்வினைத் தொடர்ந்து அமைச்சர்களுடன் ஆளுநர் ஆய்வு? முற்றுகை, பதற்றம்! 

கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கியுள்ள விருந்தினர் மாளிகையினை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால்... 

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:07 pm

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கியுள்ள விருந்தினர் மாளிகையினை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்தார். முதலில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனையில் ஈடுப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களுடன் அவர் ஆய்வுக் கூட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் ஆளுநர் அதிகார வரம்பினை மீறி செயல்படுவதாகக் கூறி, அவர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகையினை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.  முன்னதாக ஆளுநரின் திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரத்துக்கு உட்பட்டு தான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும். ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.