நெல்லையில் பெண் மருத்துவர் தீக்குளித்து தற்கொலை

நெல்லை மாவட்டம் தாழையூத்து என்ற இடத்தில் பெண் மருத்துவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நெல்லையில் பெண் மருத்துவர் தீக்குளித்து தற்கொலை
Updated on
1 min read

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் தாழையூத்து என்ற இடத்தில் பெண் மருத்துவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் மருத்துவரான உஷா ராணி (51) தாழையூத்து சங்கர் நகரில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கணவர் முரளி (55). கணவருடன் ஏற்பட்ட தகராறில் இவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார் உஷாராணி. இவருக்கு பொறியில் கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும், பிளஸ் 2 படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். 

இவர், குடும்ப தகராறு காரணமாக திடீரென நேற்றிரவு 1.00 மணியளவில் வீட்டில் இருந்த எத்தில் ஆல்கஹாலை தன் தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர், தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். 

உஷாராணியின் தந்தை போலீசாருக்கு கொடுத்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com