ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 31,236 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 9:51 pm

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 31,236 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் வியாழக்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 19,225 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 31,236 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15 ஆயிரம் கனஅடியிலிருந்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 96.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.30அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் மேட்டூர்அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 61.39 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.