கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு
பழவேற்காட்டில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது, படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.


பழவேற்காட்டில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது, படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.
பழவேற்காடு நடுக்குப்பத்தில் வசித்து வந்தவர் சந்திரவடிவேலு (50). இவர் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுடன் 3 படகுகளில் வியாழக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார்.
அப்போது, திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் சந்திரவடிவேலு நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்தார். அவருடன் சென்ற மீனவர்கள் தேடியும், சந்திரவடிவேலு கிடைக்கவில்லை. இதுகுறித்து திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரவடிவேலுவின் சடலம், முகத்துவாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கரை ஒதுங்கியது. இதையடுத்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...