விராலிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
விராலிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
Updated on
1 min read

விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் நிகழாண்டுக்கான கந்தசஷ்டி விழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை 9. 30 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு காப்புகட்டி கொடியேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தினமும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேதகராக சிங்கம், மயில், குதிரை, பறவை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி விராலிமலையின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 25-ம் தேதி(புதன்கிழமை) நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 7-ம் நாள்(வியாழக்கிழமை) திருக்கல்யாணம், 8-ம் நாள் வெள்ளிக்குதிரை வீதிஉலா, 9-ம் நாள் விடையாத்தியுடன் கந்தசஷ்டி விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் ஆர். பாண்டியராஜூ, மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து, தமிழ்திருமுறை மன்ற நிர்வாகிகள் சாமிநாதன், உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com