தேவைப்பட்டால் புளூவேல் விளையாட்டை தடை செய்ய சட்டம்: முதல்வர் நாராயணசாமி

தேவைப்பட்டால் புளூவேல் விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் புளூவேல் விளையாட்டை தடை செய்ய சட்டம்: முதல்வர் நாராயணசாமி

தேவைப்பட்டால் புளூவேல் விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவை கூட்டரங்கில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக புளூவேல் என்ற விளையாட்டால் சர்ச்சை ஏற்பட்டு பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விளையாட்டால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது சமூதாயத்தில் மிகப்பெரி விளைவை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழக  மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் புளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. புளூவேல் விளையாட்டில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் வெளியேற வேண்டும். இந்த விளையாட்டை புதுவை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகிறது.

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் புளூவேல் விளையாடுகிறார்களா என சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். புளூவேல் விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் புளூவேல் விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்றப்படும். மத்திய அரசும் இவ்விளையாட்டை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு சார்பில் புளூவேல் விளையாட்டின் தீமை குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த உள்ளோம்.

அரியலூர்  மாணவி அனிதா தற்கொலை சம்பவம் வருத்தத்துக்குரியது. மாணவி அனிதாவின் இறப்புக்கு புதுச்சேரி அரசு சார்பிலும், புதுச்சேரி மக்கள் சார்பிலும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். நீட் தகுதித் தேர்வு வேண்டாம் என புதுச்சேரி அரசு மத்தியை அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் .

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் கடைகளில் சென்று  மாமுல் வசூல் செய்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com