47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆளுநர் அழைத்து பேசாவிட்டால் கடுமையான நடவடிக்கை: எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் 

ஆளுநர் எங்களை அழைத்து பேசாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் இன்று தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 7:21 am

தினமணி

ஆளுநர் எங்களை அழைத்து பேசாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீசுக்கு நான்கு அல்லது ஐந்து எம்எல்ஏக்கள் அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கின்றனர். மேலும் முதல்வர் மாற்றம் குறித்து ஆளுநர் அழைத்து பேசாவிட்டால் இரண்டு நாட்களுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் நடைபெறும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கண் துடைப்புக்காக நடத்தப்படுகின்ற கூட்டம். எங்கள் அணியை சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் இந்த கூட்டத்தில்  கலந்து கொள்ளமாட்டார்கள்.

மேலும் சட்டப்பேரவை தலைவர் எங்களுக்கு விளக்கம் கேட்டு அளித்துள்ள நோட்டீசுக்கு பதில் அளிக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமை செயலகம் செல்கிறோம். எடப்பாடியுடனான ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்ய முடியாது . நாங்கள்தான் கட்சியை காப்பாற்றுவோம் என்றார் தங்க தமிழ்செல்வன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.