கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சொத்துக் குவிப்பு வழக்கில் வேதா இல்லம் இடம்பெற்றுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் வாழ்ந்த வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 7:08 am


சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் வாழ்ந்த வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரின் வீட்டை நினைவில்லமாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, திருச்சியை அடுத்த முசிறியைச் சேர்ந்த பொறியாளர் தங்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தொடர்ந்த வழக்கில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றக் கூடாது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் வேதா இல்லத்தில் நடைபெற்றுள்ளதால், அதனை நினைவில்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா? உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.