யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இரட்டை இலை: அக்டோபர் 31-க்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2017, 7:14 am

DIN


மதுரை: இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் விரைந்து செயல்படுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு வந்த போது, சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது 15 நாட்களில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னையில் இவ்வளவு கால தாமதம் ஏன் என்று கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்த தேர்தல் அணையம், இரு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுவதால் கால தாமதம் ஏற்படுகிறது. 2 அணிகளும்தான் மாறி மாறி கூடுதல் கால அவகாசம் கோரி வருகின்றன என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 31ம் தேதிக்குள் இரட்டை இலைச் சின்னம் குறித்து முடிவெடுத்து அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.