போராட்டத்தில் ஈடுபடுவோரை 1 மணி நேரத்தில் பணியில் இருந்து நீக்க முடியும்: நீதிபதிகள்

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு நீக்க உத்தரவிட முடியும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடுவோரை 1 மணி நேரத்தில் பணியில் இருந்து நீக்க முடியும்: நீதிபதிகள்


மதுரை: போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு நீக்க உத்தரவிட முடியும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, போராட்டத்தை உடனடியாக கைவிட்டு பணிக்குத் திரும்பினால் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஆனால், போராட்டத்தை உடனடியாக திரும்பப் பெற ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் தயக்கம்  தெரிவித்ததை அடுத்து உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் வெளியிட்டது.

போராட்டத்தைக் கைவிட தயங்கினால் ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு நீக்க உத்தரவிட முடியும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

போராட்டத்தை முழுமையாக திரும்பப் பெற்றுவிட்ட பிறகு, பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்றும், தீர்வு கிடைக்காவிட்டால் இவ்வளவு காலம் நடத்திய போராட்டங்கள் பயனில்லாமல் போய்விடுமோ என்றும், தலைமைச் செயலர் பேச்சுவார்த்தைக்கு வருவாரா என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்தேகம் எழுப்பினர்

இந்த தயக்கத்துக்கு பதிலளித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைளை நீதிமன்றம் ஏற்கிறது. தொடர்ந்து தீர்வு காணும் முயற்சியில் நீதிமன்றம் ஈடுபடும் என்று உறுதி அளிக்கிறோம் என்று கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com