குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்கவே எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: டிடிவி தினகரன்
குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்கவே எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்கவே எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று உத்தரவு பிறப்பித்தார். சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,
குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். நீதிமன்றத்தை நாடி நீதியை பெறுவோம்.
துரோகம் வென்றதில்லை, நீதி வெல்லும், பேரவை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் பங்கேற்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...