கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று அதிமுக அணி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பி.தனபால் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதன் காரணமாக, 18 பேரும் தங்களது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை இழந்து விடுவதாக சட்டப் பேரவைச் செயலகம் அறிவித்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் கர்நாடக மாநிலம் கூர்க்கில் பகுதியில் தங்கியுள்ளனர். அவர்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: அதிமுகவை மீட்கவே நாங்கள் கூர்க்கில் தனது ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவியே முக்கியம் என கருதாமல் எங்கள் ஆதரவாளர்கள் கட்சியை மீட்பதற்காகவே போராடி வருகிறார்கள்.
ஓபிஎஸ் உடன் சேர்ந்து ஈபிஎஸ் கூட்டியது அதிமுக அம்மா அணியின் பொதுக்குழு அல்ல. உண்மையான அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை விரைவில் கூட்டுவேன்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய தினகரன் ஜெயலலிதா மரணத்திற்கு பின்பும் சிறு சலனம்கூட இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் என்றார்.
பொதுக்குழு என்ற பெயரில் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லாது. ஜெயலலிதா பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவது பதவிக்காகவே. பயத்தால் அமைச்சர்கள் மாறி மாறி பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதில் எது உண்மை.
*நோய்தொற்று ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


