சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படுமென்று நிறுவனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தற்பொழுது வித விதமான தகவல்கள் பரவி வருகின்றன. முதலில் சிகிச்சையின் பொழுது ஜெயலலிதா தொடர்பாக நாங்கள் கூறிய தகவல்கள் எல்லாம் பொய் என்று மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் அது தொடர்பாக ஒவ்வொரு அமைச்சரிடம் இருந்தும் மாறுபட்ட தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் சிகிச்சையின் பொழுது ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா வீடியோ எடுத்தார் என்று டிடிவி தினகரன் தெரிவித்து பரப்பரப்பைக் கிளப்பினார்.
தொடர்ந்து சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில் அப்பொழுது போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கயில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட வேண்டுமென்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அதன் நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர், 'ஜெயலலதாவுக்கு எங்களால் இயன்ற வரை 100% சிறப்பான உயர்தர சிகிச்சை அளித்தோம். அவருக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹரிப்ரசாத், 'சிகிச்சை தொடர்பாக நடக்கும் எந்த விதமான விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


