
மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ் பார்த்தார்களா என்பது குறித்து இருவரும் விளக்கமளிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்துவோரின் பட்டியலை வெளியிட வேண்டும். மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ், பார்த்தார்களா என தெரிவிக்க வேண்டும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசையும் விசாரிக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி ஏன் பார்க்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி பேசி வருவது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.