மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதா உடல்நிலை எப்படி இருந்தது?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2017, 5:39 am


சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அன்றைய தினம் முதல், அவரது உடல்நிலை குறித்தும், டிசம்பர் 5ம் தேதி அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது மரணம் தொடர்பாகவும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பதிவு செய்த அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

Story image

அதாவது, ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு என்னென்ன பிரச்னைகள் இருந்தன என்று அந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவருக்கு சராசரியாக இருக்க வேண்டிய  ரத்த அழுத்தம் 120/80. ஆனால், ஜெயலலிதாவுக்கு அப்போது 140/70 என்ற அளவில் இருந்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு வழக்கமாக இருக்க வேண்டிய இதயத் துடிப்பின் அளவு 72க்கு பதில் 88 ஆக அதிகரித்துள்ளது.

உடலில் 120 எம்.ஜி.யாக இருக்க வேண்டிய சர்க்கரை அளவு 508 என்ற அபாய அளவில் இருந்துள்ளது. திடீரென அவரது உடலில் சர்க்கரை அளவு இந்த அளவுக்கு அதிகரிக்கக் காரணம் என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

ஜெயலலிதாவின் உடலில் ஆக்ஸிஜன் அளவு 100% பதிலாக  45 சதவீதம் மட்டுமே இருந்திருக்கிறது. அதோடு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவருக்கு நிமோனியா காய்ச்சல், ரத்த அழுத்தம், தைராய்டு, சரக்கரை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் இருந்துள்ளன என்று அந்த மருத்துவ ஆவணத்தில் பதிவாகியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.