
தமிழகத்தில் நாள்தோறும் ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருகிறது. சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது, நிலவேம்புக் குடிநீர் விநியோகிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைளை அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகிறது.
இதுவரையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 11,500 பேர் வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆவர்.
மேலும், தமிழகம் வந்த மத்திய குழுவினர் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க ரூ. 256 கோடி நிதி தேவை என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
இந்நிலையில், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு காய்ச்சலை சேர்த்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த ஆய்வறிக்கையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.