மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காவிரி மேலாண்மை வாரியம்: போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சி போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 ஏப்ரல் 2018, 8:51 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சியான திமுக சார்பில், அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி விவகாரம், நியூட்ரினோ ஆய்வு மற்றும் மீத்தேன் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு அளிக்குமாறு வணிக சங்க பேரமைப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும். 

அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். மேலும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் போது கறுப்புக்கொடி காட்ட முடிவு எடுத்துள்ளோம் என்றார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பின்போது ரயில், பேருந்துகளை மறித்து போராட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை எங்களை கைது செய்தாலும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் பேசினார்.    

அப்போது திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன், கி.வீரமணி, உதயநிதி உள்ளிட்டோரை கைது செய்து பின்னர் விடுவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.