காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை அண்ணா சாலையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தப் மறியல் போராட்டத்தில் திருநாவுக்கரசர், திருமாவளவன், கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். சாலை மறியலை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடியுடன் மெரினாவில் உள்ள அண்ணாநினைவிடம் நோக்கி பேரணியாகச் செல்கின்றனர்.
சென்னை அண்ணாசாலை - வாலாஜா சாலையில் நடைபெற்ற மறியல் மற்றும பேரணி காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!

300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!

ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல: மு.க. ஸ்டாலின்

அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



