முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கின் விசாரணையை பூந்தமல்லி நீதிமன்றம் 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில், 'திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்விக்குச் சொந்தமான இடம் காஞ்சிபுரம் மாவட்டம் தாளம்பூரில் உள்ளது. சுமார் 2.94 ஏக்கர் பரப்பிலான இந்த நிலத்தை ரூ.3.5 கோடி முன்பணம் செலுத்தி வாங்கினேன். ஆனால் இடத்தை எனக்கு கொடுக்காமல் வேறு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பணத்தை திருப்பிக் கேட்டதால் மிரட்டப்பட்ட நான் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செல்வி, அவரது உறவினர் ஜோதிமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?

மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் காணிக்கை... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


