மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

காவிரி போராட்டம்: சென்னையில் 10 ஏம்எல்ஏக்கள் உட்பட 6000 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டங்களில், 10 எம்எல்ஏக்கள் உட்பட 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 2:58 pm IST


சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டங்களில், 10 எம்எல்ஏக்கள் உட்பட 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இன்று நடத்திய முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் பரவலாக சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, சென்னையில் 35 இடங்களில் சாலை மறியல், 5 இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் 51 இடங்களில் நடத்தப்பட்ட ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களில் 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.  அண்ணா சாலையில் நடந்த போராட்டத்தின் போது மு.க. ஸ்டாலின் உட்பட 10 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டக்காரர்களால், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 10 பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.