வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சேலத்தில் தபால் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சேலம் லைன்மேடு பகுதியில் தெற்கு தபால் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image

சேலம் தெற்கு தபால் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்.

Updated On :6 ஏப்ரல் 2018, 1:35 am IST

சேலம் லைன்மேடு பகுதியில் தெற்கு தபால் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் லைன்மேட்டில் உள்ள கே.எஸ். தியேட்டர் அருகில் சேலம் தெற்கு தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் இளைஞர்கள் சிலர் தபால் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது.
இதனிடையே, வியாழக்கிழமை காலை தபால் நிலையத்தை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் அலுவலகத்தின் முன்புறம் பெட்ரோல் குண்டு வீசி இருப்பதையும், பாட்டில்கள் சிதறி கிடப்பதையும் கண்டு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 
அதன்பேரில், காவல் ஆய்வாளர் குமார் தபால் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவானவர்களைத் தேடி வருகிறார். தபால் நிலையம் அருகில் உள்ள கடை மற்றும் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் பார்வையிட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.