பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தமிழ் ஆர்வலர்களுக்கான 90 விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி 

தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது உட்பட 90 விருதுகளை, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கி கௌரவித்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:00 pm IST

சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது உட்பட 90 விருதுகளை, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கி கௌரவித்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 2017ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உவேசோ விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, 2016ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதுகள் என மொத்தம் 90 விருதுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.

தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் சான்றோர்களையும், தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, ஆண்டு தோறும் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட தமிழ் அறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் இன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.