மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய இசைவாணை (ஒப்புதல்) இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் கூறி தூத்துக்குடி சிப்காட்-2 திட்ட அலுவலருக்கு விளக்கம் கேட்டு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் த. கண்ணன் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்கா-கட்டம் 2 திட்ட அலுவலருக்கு அனுப்பிய கடிதம் விவரம்:
1988ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 1974 ஆம் ஆண்டு நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் இந்த விளக்கம் கேட்கப்படுகிறது. தங்களது நிறுவனமான சிப்காட் தொழிற் பூங்கா-கட்டம் 2, சிப்காட் தொழிற்சாலை வளாகம், தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய இசைவாணை (ஒப்புதல்) இன்றி செயல்பட்டு வருகிறது.
மேற்படி சட்டத்தின் 25 ஆம் பிரிவின் வரைமுறைகளை மீறியுள்ளீர்கள். அந்தச் செய்கையானது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றம் 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாகும் கால அளவுக்கு சிறைத் தண்டனையும் மற்றும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படத் தக்கதாகும்.
எனவே, தண்டிக்கப்படத்தக்க குற்றங்களுக்காக நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஏன் உங்கள் நிறுவனம் மீது குற்றவியல் வழக்குத் தொடரக்கூடாது என்பதற்கும், உங்கள் நிறுவனத்தை மூடுவதற்கும், மின்சாரம் வழங்குதல் மற்றும் நீர் வழங்குதலை நிறுத்தவும் ஏன் ஆணை பிறப்பிக்கக் கூடாது என்பதற்கும் இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாள்களுக்குள் காரணம் காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள் பதில் எதுவும் பெறப்படாவிட்டால், தங்கள் தரப்பில் திருப்தி அளிக்கும் விளக்கம் ஏதுமில்லை எனக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற கடிதம் சென்னையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா மேலாண்மை இயக்குநர் அலுவலகத்துக்கும், வேதாந்தா நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. திருநெல்வேலி சங்கர்நகரைச் சேர்ந்த எஸ்.பி. முத்துராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யை த்ரிஷா அன்ஃபாலோ செய்தது ஏன்?

தர்மன் திரைப்படத்தில் இணைந்த நடிகை சிம்ரன்!

வாகை சூட வா தொடரில் விஜய் பட நாயகி!
ரீல்ஸ் ஆட்சிக்காக ரியல் ஆட்சியை இழந்துவிட்டோம் என மக்கள் வருத்தம்! மேயர் பிரியா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



