தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நெட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On :6 ஏப்ரல் 2018, 2:36 am IST

கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இதில் நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டிருந்தது. அதன்படி, தேர்வானது ஜூலை 8 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
கால அவகாசம் நீட்டிப்பு: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஏப்.5) கடைசி என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான இந்த கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்த ஏப்ரல் 13 கடைசி நாளாகும்.
கட்டணம் எவ்வளவு? தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.,) ரூ. 500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தாள்கள் மட்டுமே: இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. 2018 -ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.