சென்னை: காவிரி போராட்டத்தில் கைதாகி பெரம்பூர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், போராட்டக்களத்தில் விசிக தொண்டர் ஒருவருக்கு திருமணம் நடத்தி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வியாழன் காலை சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று போராடிய மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து, பெரம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தற்பொழுது தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் ஒருவருக்கு மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் ஒருவரது திருமணம் இன்று அவர்களது கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடப்பதாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அறிவிக்கப்பட்ட காவிரி போராட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன், கைதாகி தற்பொழுது ஸ்டாலினுடன் பெரம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் இருக்கிறார்.
ஆனாலும் அவரது தலைமையில்தான் திருமணம் நடைபெற வேண்டுமென்று விரும்பிய ஜோடி நேராக பெரம்பூர் திருமண மண்டபத்திற்கே வந்து விட்டது, பின்னர் திருமாவளவனின் வேண்டுகோளின் பெயரில் ஸ்டாலின் அவர்களது திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.
இந்த ருசிகர சம்பவம் அங்குள்ளவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



