எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

முன்னெச்சரிக்கையாக மெரீனா கடற்கரையில் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிப்பு

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 11:27 am IST


சென்னை: தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று நடந்துவரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இன்று காலை மெரீனாவில் ஊர்வலம் செல்ல முயன்றார். அவரை காவல்துறையினர் குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். அவருடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சூழ்நிலையைப் பயன்படுத்தி மாணவர் -  இளைஞர் அமைப்பினர் கூடி விடக் கூடாது என்பதற்காக மெரீனா கடற்கரை நோக்கி செல்லும் பாதைகளை காவல்துறையினர் அடைத்து விட்டனர்.

மேலும், சென்னை மெரீனா கடற்கரை பகுதி முழுவதும் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.