முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மேட்டுப்பாளையத்தில் கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழப்பு

மேட்டுப்பாளையத்தில் கோயிலில் அவல் பிரசாதம் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழந்தனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 2:35 pm IST

மேட்டுப்பாளையத்தில் கோயிலில் அவல் பிரசாதம் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியிலுள்ள நாடார் காலனியில் முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அவுல், சர்க்கரையுடன் நெய் கலந்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை காலை கோயில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு, வாந்திபேதியுடன் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள்,  கெட்டுப்போன உணவுப் பொருளை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.  உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 31 பேருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சேரலாதன் தலைமையில் அன்னூர் அரசு மருத்துவர் ரவிச்சந்திரன், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவர் பார்கவி உள்ளிட்ட   மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.  எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அவுல் பிரசாதத்தில் காலாவதியான நெய் பயன்படுத்தப்பட்டதுதான் இப்பிரச்னைக்குக் காரணம் என தெரியவந்தது.   இது குறித்து மேட்டுப்பாளையம்  போலீஸார் விசாரனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயிலில் அவல் பிரசாதம் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 2 பெண்கள் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.