காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னை பூங்கா நகர், எழும்பூர் ரயில் நிலையங்களில் மின்சார ரயில்களை நிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பூங்கா நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் திரண்டனர். அவர்கள் சென்னை கடற்கரை -தாம்பரம், தாம்பரம் -கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் என்ஜின் மீது ஏறியும், தண்டவாளத்தில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்கள் எழுப்பினர்.
இவர்களின் போராட்டம் காரணமாக இரு மார்க்கத்திலும் ரயில் சேவை சுமார் 40 நிமிடம் வரை பாதிக்கப்பட்டது. இதனால் ஆங்காங்கே வழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
திராவிடர் கழகத்தினர்: திராவிடர் கழகம் சார்பில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தாம்பரம் -சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து திராவிடர் கழகத்தின் சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 80 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



