கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இரு பெண்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம், நாடார் காலனி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் திருவிழா ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கியது. அன்று மாலை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு நெய் கலந்த அவல், சர்க்கரைக் கலவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனை சாப்பிட்ட பக்தர்களுக்கு அடுத்த நாள் காலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இதில், நாடார் காலனி பகுதி, மாதையன் லே-அவுட்டில் வசிக்கும் சாவித்ரி (60), அதே பகுதியில் வசிக்கும் லோகநாயகி (65) ஆகிய இருவரும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
உடல் உபாதையால் பாதிக்கப்பட்ட இவர்கள் இருவரும் மருத்துவச் சிகிச்சை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்கள் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


