கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கருப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸும் பங்கேற்கும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவார்கள் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ்

Updated On :9 ஏப்ரல் 2018, 7:57 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவார்கள் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே .எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். 
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த மத்திய அரசை கண்டித்து பெரும்பாக்கத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். 
இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது: மத்தியில் பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வரலாறு காணாத அளவில் கொடுமைகள் நடந்துள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தலித் பெண்கள் மீது வன்கொடுமைகளும், பாலியல் துன்புறுத்தலும் அதிகரித்து வருகின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் தலித் மக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் எப்போதும் இருப்போம். இதை வலியுறுத்தும் நோக்கத்திலேயே அகில இந்திய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ராகுல்காந்தி அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையிலேயே இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் எனக் கூறிவிட்டு இமயமலை செல்கிறார். அவருக்கு பக்க பலமாக பாஜகவும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் இருந்து வருகின்றன. தமிழக பாஜக தலைவர் தமிழிசையோ, காவிரி பிரச்னைக்கு தீர்வு காணாமல் போனது காங்கிரஸ் கட்சியும், திமுகவும்தான் என குற்றஞ்சாட்டி வருகிறார். 
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 6 வார கால அவகாசம் அளித்தும், மத்திய அரசு மெத்தனப் போக்குடன் நடந்து கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை வர இருக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினரும் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார். 
உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் நா.செ.ராமச்சந்திரன், நிர்வாகிகள் மோகன்தாஸ், வெங்கடேசன், கொப்பூர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.