ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டு, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு உதவிப் பேராசிரியை அழைத்துச் சென்ற விவகாரத்தில் பல மோசமான செய்திகள் வருகின்றன. இதனால், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற்றால்தான் உண்மை வெளிவரும்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவது போன்று ஆளுநரின் செயல்பாடு உள்ளது. ஆளுநர் பொறுப்புக்கு பன்வாரிலால் புரோஹித் தகுதியில்லாதவர். அதனால், அவரை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் பதவி விலகும் வரையிலோ அல்லது அவரை பதவியில் இருந்து நீக்கும் வரையிலோ திமுக சார்பில் போராட்டம் தொடரும்.
மனிதச் சங்கிலி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்.23-இல் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த உள்ளோம். காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மே 3- ஆம் விசாரணைக்கு வருகிறது. அதில் எடுக்கப்படும் முடிவைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
ஆனால், முதல்வரிடம் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். இதற்கு முதல்வர் மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர் நேரம் அளித்தால் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?

இங்கிலாந்து ரசிகர்கள் எனது பெயரை முழக்கமிடுவதில்லை..! ஜேமி ஓவர்டன் நெகிழ்ச்சி!

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

