ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

சினிமா பாணியில் சிபிஐயின் சோதனை: திருச்சி விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மூவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ நடத்திய அதிரடி சோதனையின் ஒரு பகுதியாக சுங்கத் துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published On :

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ நடத்திய அதிரடி சோதனையின் ஒரு பகுதியாக சுங்கத் துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் சுங்கத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு கடத்தி வரப்படுவதாக வந்த குற்றச்சாட்டின் கீழ் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு விமான நிலையத்திற்கு 3 கார்களில் வந்த அதிகாரிகள் குழு விமான நிலைய சுங்கத்துறை பகுதிக்குள் நுழைந்தனர். வனத்துறை அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் என பலரும் நினைத்திருந்த நிலையில், சிறிது நேரத்துக்கு பின்னர் தான், வந்திருந்தது சிபிஐ அதிகாரிகள் என்பது அங்கிருந்தவர்களுக்கு தெரியவந்தது. 

அப்போது, சிங்கப்பூர் விமானத்தில் வந்த பயணிகள் சோதனைகள் முடித்து வெளியே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் சிபிஐ அதிகாரிகள் உள்ளே அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள், பயணிகள் போர்வையில் இருந்த வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் இரவு வரை சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டது. 

துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஆய்வாளர்கள் 3 பேர் உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டது. கடத்தல் சம்பவங்களில் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா அல்லது வியாபாரிகள் சிலர் பயணிகள் போர்வையில் கடத்தல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 23 மணி நேர சோதனையின் ஒரு பகுதியாக சுங்கத் துறை உதவி ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர்கள் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

3 அதிகாரிகளும் தங்கியிருந்த அறைகள், அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளிலும் சோதனை நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்ட 3 பேர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இவர்களது ஒத்துழைப்போடு தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மலேசியாவிலிருந்து ஜூலை 25ஆம் தேதி திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.3 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விமான நிலையத்தில் கிரவுண்ட ஹேன்ட்லிங் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் 3 பேர், பயணி ஒருவர், தங்கத்தைப் பெற்றுக் கொள்ள வந்திருந்தவர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1,000க்கும் அதிகமான ஆமைக் குஞ்சுகளை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் விமான நிலையத்தில் விட்டுச் சென்றார். வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஆமைக் குஞ்சுகளை, வெளிநாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் பாம்பு, தேள், ஓணான், பல்லி உள்ளிட்ட பல்வேறு வகையிலான உயிரினங்கள் நூற்றுக்கணக்கில் கடத்தி வரப்பட்டது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், திருச்சி விமான நிலையத்தில் எப்படி கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன என்பது குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனையில் சுங்கத் துறை அதிகாரிகளே கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.