எம்.ஜி.ஆருக்கு இல்லை.. ஆனால் கருணாநிதிக்கு உண்டு: அஞ்சலியிலும் ஒரு ஸ்பெஷல் 

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு புதனன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அஞ்சலி  செலுத்தும் வகையில் ஒத்தி வைக்கப்பட்டதில் ஒரு முக்கிய விஷயம் மறைந்துள்ளது.
எம்.ஜி.ஆருக்கு இல்லை.. ஆனால் கருணாநிதிக்கு உண்டு: அஞ்சலியிலும் ஒரு ஸ்பெஷல் 
Published on
Updated on
1 min read

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு புதனன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அஞ்சலி  செலுத்தும் வகையில் ஒத்தி வைக்கப்பட்டதில் ஒரு முக்கிய விஷயம் மறைந்துள்ளது.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். புதனன்று சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு பெருமளவில் திரண்டு வந்து   அஞ்சலி  செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதியின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

முன்னதாக புதனன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியவுடன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறிப்புகள் வாசிக்கப்பட்ட பின்னர், இரண்டு அவைகளும் பணிகள் எதுவும் நடைபெறாமல் நாள்முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

இவ்வாறு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டதில் ஒரு முக்கிய அம்சம் உள்ளது.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிலும் உறுப்பினராக இல்லாத, ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு இதுவரை இப்படிப்பட்ட ஒரு மரியாதை வழங்கப்பட்டதில்லை. இதுவரை கீழ்கண்ட முதல்வர்களின் மரணத்திற்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது கிடையாது.

எம்.ஜி.ராமச்சந்திரன் (பதவியில் இருக்கும் பொழுது மரணம்)  

பி.சி.ராய் (பதவியில் இருக்கும் பொழுது மரணம்)

ஜோதி பாசு

என்.டி.ராமராவ்

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி (பதவியில் இருக்கும் பொழுது மரணம்)

டோர்ஜி காண்டு (பதவியில் இருக்கும் பொழுது மரணம்)

ஆனால் 2016 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பொழுது அவருக்கு அஞ்சலி தெரிவித்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அவர் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே புதனன்று அவைகளை ஒத்தி வைக்கும் முடிவை எடுக்கும் முன்பாக மாநிலங்களவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடு அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார் என்பது கவனிக்கத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com